கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை..

கும்பகோணம்:
கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர்.

கேரள மாநிலம் களமசேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக் கூட்டம் காலை நடைபெற்றது. அப்போது கூட்ட அரங்கில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ மற்றும் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கோயில் நகரமான கும்பகோணம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவித் துணை ஆய்வாளர் எம்.எஸ்.விவேகானந்தன் தலைமையில் தலைமைக் காவலர் கே.மணி மற்றும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்துக்கு வந்து, செல்லும் பயணிகளின் உடைமைகளைத் தீவிர சோதனையிட்டப் பின், ரயில் நிலையத்தினுள் அனுமதித்தனர். இதுபோல் இன்று கும்பகோணத்துக்கு வந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட ரயில்களில் வந்து சென்ற பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்