இந்தியாவுக்கு ஹாக்கியில் வெண்கலப் பதக்கம்…!

கோலாலம்பூர்: சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஜூனியர் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் நடைபெற்று வந்த சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி சார்பில் அருண் ஷஹானி 11-வது நிமிடத்திலும், 42-வது நிமிடத்தில் பூவன்னாவும், 52-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுஃப்யான் கான் (33-வது நிமிடம்), அப்துல் கயூம் (50-வது நிமிடம்), ஷாஹித் ஹன்னன் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்பில் இரு அணிகள் தரப்பிலும் தலா 4 கோல்கள் அடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘சடன்டெத்’ விதி முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி தரப்பில் விஷ்ணுகாந்த் சிங், அங்கத் பிர் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அர்ஷத் லியாகத் கோல் அடித்தார். அந்த அணியின் கேப்டன் ஷாஹித் ஹன்னனின் கோல் போடும் முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் மோஹித் அற்புதமாக தடுத்து நிறுத்தினார். இதனால் இந்திய அணி 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை