நெல்லையில் நவ.18-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: கிருஷ்ணசாமி அறிவிப்பு…..

மதுரை:
“தென்மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் சாதிய வன்முறையை ஒடுக்க வலியுறுத்தி நெல்லையில் வரும் 18-ம் தேதி பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மாவட்டத்தில் 1990 முதல் 2010 வரையிலான காலத்தில் இருந்த சாதிய வன்முறை, மத நல்லிணக்கம் முயற்சியால் அமைதி ஏற்பட்டது. ஆனால், சில மாதமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 3 மாதத்தில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை போன்ற இடங்களில் 30-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும். தென்மாவட்டங்களில் நடக்கும் வன்முறையை தடுக்க நவம்பர் 18-ல் நெல்லையில் மனித உரிமை மீட்பு, வன்கொடுமை தடுப்பு பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அரசியல் கட்சிகள் உட்பட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் 2006 முதல் கனிமவளம் தொடர்ந்து கொள்ளை போகிறது. குறிப்பாக மதுரை, திருப்புத்தூர், சேலம் போன்ற பகுதியில் கிரானைட் கொள்ளை நடக்கிறது. ஏற்கெனவே, மேலூர் பகுதியில் பெயருக்கு கொஞ்சம் பட்டா இடத்தை குத்திகைக்கு எடுத்துவிட்டு, அருகிலுள்ள அரசு புறம்போக்கு இடம், கோயில் குளம், மலைப்பகுதிகள் சூறையாடப்பட்டன. மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் ரூ.1.50 லட்சம் கோடி கனிம கொள்ளை நடந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக 21 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனாலும், இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 2014-ல் எம்எல்ஏவாக இருந்தபோது, இரண்டு முறை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். அதன்பின்னரும் கூட அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை வழக்கு தொடர்ந்து நிலுவையிலுள்ளன.

இந்நிலையில், மீண்டும் கிரானைட் குவாரிகளுக்கு ஏலம் அறிவித்து இருப்பது ஏற்று கொள்ள முடியாது. அரசு இதை உடனடியாக கைவிட வேண்டும். இனிமேல் எந்த அரசும் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மத்திய அரசும் அனுமதி வழங்க கூடாது. தேவையெனில் நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் நிதி பெறும் உள்நோக்கமாக சந்தேகிக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கிரானைட் நிலுவை வழக்குகளுக்கு விரைவாக தீர்வு கண்ட பிறகே அனுமதி பற்றி யோசிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே பயம் இருக்கும். இனி தவறு நடக்காது. டிசம்பர் 15-ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும். இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65