ஓட்டு அரசியலுக்காக கிறித்தவ மக்கள் மீது ஏவப்படும் சாதி மத மோதல்களை முறியடிப்போம் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. பேராயர்கள் ஆயர்கள் குருக்களுடன் கலந்து பேசி கிறிஸ்தவர்களின் நீண்ட
கால கோரிக்கைகளான இட ஒதுக்கீடு பிரச்சினைகளையும் மத வழிபாட்டுத் தளங்களில் எழும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
விழுப்புரம் மாவட்டம் கக்கனூரில் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் துணை தலைவர் டாக்டர் S A தாஸ் பொதுச்செய
லாளர் டாக்டர் டேனியல் தர்மராஜ் கடலூர் மாவட்ட செயலாளர் அந்தோணி சாமி ஊர் பெரியவர்கள் தலைமையில் நிகழ்ச்சி கள் சிறப்பாக நடைபெற்றது. நிறுவன தலைவர் இருதயம் வல்லரசு ஒருங்கிணைப்பு தலைவர் வழக்கறிஞர் இருதயசாமி மற்றும் இளைஞரணி அசோக் செல்வராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* M M K கொடி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கி
* ஆரி அந்தோணிதாசுக்கு அஞ்சலியும்
* மக்கள் மேம்பாட்டு கழக கொள்கைகள்
* ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
துணை தலைவர் SA தாஸ் மற்றும் பொதுச்செயலாளர் டேனியல் தர்மராஜ் பேசும் போது இனி வரும் காலங்களில்
ஒவ்வொரு பங்கிலும் பங்கு தந்தையர் பக்த சபைகளின் தலைவர் தலைவிகள் பங்கு நிர்வாகிகள் குறிப்பாக அந்த ஊர் நாட்டாமை அன்பிய தலைவர்களையும். மரியாயின் சேனை தலைவிகள் மற்றும் ஆசிரியர்கள் இளைஞர்களை சந்தித்து மக்கள் மேம்பாட்டு கழகத்தின் அரசியல் நிலைபாடு குறித்து பேசி வருகிறோம்ஃ
இன்றைய திருச்சபையாளர்கள் பொது நிலையினர்களுக்கு அரசியல் அவசியம் என்பது குறித்து விரைவில் கிறித்தவர்
களுக்கான அரசியல் எழுச்சி மாநாடு ஒன்றை புதுவை கடலூர் உயர் மறை மாவட்டத்தின் சார்பில் பொது நிலை
யினர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருதயசாமி வழக்கறிஞர் பேசும் போது மக்கள் மேம்பாட்டு கழகம் இந்திய அளவில் பேசப்படும் கட்சியாக மாறப்
போகிறது இனி எந்த கட்சியாக இருந்தாலும் சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கிறித்தவர்களுக்கு MLA MP தருபவர்களுக்கு ஓட்டு போடுவோம்.
இருதயம் வல்லரசு பேசும் போது மக்கள் மேம்பாட்டு கழகம் கிறித்தவர்களை அரசியல் சக்தியாக மாற்றுவதற்காக
உருவாக்க பட்ட அரசியல் கட்சி இது அனைத்து கிறிஸ்தவர்களுக்குமானது சபைகளாகவும் சாதிகளாகவும் பிரிந்து
கிடக்கின்ற கிறிஸ்தவர்களை தமிழக அளவில் அரசியாலாக ஒருங்கிணைத்து வருகிறது.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு சீட் ஒதுக்கும் கட்சியை ஆதரிப்போம் என்று பேசினார் அப்போது ஊர் பெரியவர்கள் நாட்டாமை காரர்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு கிறிஸ்தவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பினார்கள்.
அதன் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் பகுதியில் அக்ரா பாளையம் பங்கு ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தேவாலய வளாகத்தில் அத்துமீறி ஏற்பட்டுள்ள பாதை பிரச்சினை குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறை பொது மக்களை சந்தித்து வந்தனர். இது குறித்து மறை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பிறகு தீர்வு காணப்படும். பங்கு தந்தை மற்றும் இறை மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சட்டப்படி விரைவாக தீர்வு காணப்படும்.







