22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்…
=================================================================
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து… (குறள் 220)
விளக்கம்
ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருள் கேடு வருமானால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளத்தக்க சிறப்புடையது ஆகும்.







