உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் பிறந்தநாள் வாழ்த்து !

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் இருதயம் வல்லரசு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அனைத்து சபைகளின் கிறிஸ்தவர்ளும் இணைந்து இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டு கொள்கையை முன்னெடுத்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிற அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது அதிலும் குறிப்பாக சமத்துவ பெரியார் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் முதுபெரும் தலைவர் டாக்டர்.கலைஞர் ஆட்சி காலத்தில் தான் இட ஒதுக்கீடு உயிரோட்டம் பெற்று சமூகநீதி கொள்கை சட்டமாக்கப்பட்டது.

அனைத்து சமூகங்களுக்குமான இட ஒதுக்கீட்டை திமுக பிரித்து அளித்திருக்கிறது அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் மேம்பாட்டு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 % சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக வழங்கி இருக்கிறது.

அதற்கு மக்கள் மேம்பாட்டு கழகம் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.

இட ஒதுக்கீடு என்றாலே கலைஞர் என்றாகி ஆகிவிட்டது சமூகநீதி யை உயிரோட்டமாக பேணிப் பாதுகாத்து பகிர்ந்தளிக்கிற கழகமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது கலைஞர் ஆட்சியிலும் சரி அது அவரது புதல்வரான முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல அவரது வழித்தோன்றலாக இளவலாக அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பிறந்தநாளில் மக்கள் மேம்பாட்டு கழகம் கோரிக்கை வைக்கிறது தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கிய தமிழக அரசு மீண்டும் அதை உயர்த்தி 5% தர வேண்டும் என்று கேட்டுள்ளோம் தாங்கள் அதை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

கிறிஸ்தவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீடு என்று வருகிற பொழுது கிறிஸ்தவர்கள் எந்த சாதி பட்டியலிலும் இடம் பெறவில்லை இதுவே சமூக அநீதிக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது.

கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் அந்தஸ்தோடு கைவிடப்படுகிறார்கள் சிறுபான்மையினருக்கான சலுகைகள் பெரும்பாலும் திருச்சபையாளர்கள் நடத்துகிற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கிறதே தவிர கிறிஸ்தவ மக்கள் அதில் எந்த விதமான பயனையும் அனுபவிக்கவில்லை.

இதை உணர்ந்த கலைஞர் அவர்கள் இதையெல்லாம் சரி செய்கிற விதத்தில் கிறித்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கினார் அதையும் ஆயர்கள் அரசியல் முயற்சியற்ற நிலையில் தமிழக அரசிடம் திரும்பவும் ஒப்படைத்து விட்டார்கள்.

மீண்டும் மக்கள் மேம்பாட்டு கழகம் 3.5 % இட ஒதுக்கீட்டை 5% உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் அன்றைய காலகட்டத்தில் 3.5% வழங்கப்பட்டது இப்போது அதை 5% ஐந்து விழுக்காடுகளாக கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று இன்றைய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் கோரிக்கை வைக்கிறது

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பறிக்கப்பட்ட 3.5% ஒதுக்கீட்டை 5% மாக கிறித்தவர்களுக்கு வழங்க வேண்டும் இல்லாத பட்சத்தில் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் MBC மக்கள் மேம்பாட்டு கழகம் தமிழக முழுக்க கிறிஸ்தவருடைய வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளிப்பதற்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறது.

எனவே எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு குறிப்பாக மக்கள் மேம்பாட்டு கழகத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

40 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை மக்கள் மேம்பாட்டு கழகத்திற்கு 2 தொகுதியை வழங்க வேண்டும் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைத்து கிறிஸ்துவ வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்குவார்கள் என்பதனை தமிழக ஆயர் பேரவையோடு மக்கள் மேம்பாட்டு கழகத்தை அழைத்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் அரசியல் அதிகாரத்தை பங்கிட்டு தருவதிலும் முன்கை எடுத்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை விடுத்து வாழ்க திமுக வளர்க சமூகநீதி கொள்கை என்று மக்கள் மேம்பாட்டு கழககத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் பிறந்தநாள் வாழ்த்து !

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு