ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் : வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள், பணம், பரிசு பொருட்களையும்  தேர்தல் ஆணைய அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்  வாக்காளர்களுக்கு கொடுக்க சேலைகளை பதுக்கி வைத்திருந்தது தொடர்பான புகாரின் மீது, அவர் ஈரோட்டில் பண்டல் பண்டலாக சேலைகள் மார்ச் 26ந்தேதி அன்று தேர்தல் அலுவலர்களால்  பறிமுதல் செய்யப்பட்டது. இது சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.

அதாவது, கவுந்தப்பாடி அருகே உள்ள கல்யாண ஸ்டோரில் சுமார் 100க்கும் மேற்பட்ட பண்டல்களில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது 161 பண்டல்களில் சுமார் 25ஆயிரம் சேலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்யாண ஸ்டோரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பண்டல்கள் தனது நண்பர் யுவராஜ் என்பவர் கொடுத்ததாகவும், இது அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்காக இங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனடிப்படையில் பண்டல்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் இது தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடைப்படையில் வாக்காளர்களுக்கு வழங்க சேலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஆற்றல் அசோக்குமார், அவரது நண்பர் யுவராஜா மற்றும் கல்யாண ஸ்டாரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆற்றல் அசோக்குமார் தரப்பில், தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த சேலைகளை திரும்ப தர உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.