குடியரசுத் தலைவர் மாளிகையில் 15 பேருக்கு தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2024-ஐ குடியரசுத் தலைவர் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்களுக்கு 2024 ஆண்டுக்கான தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். மொத்தம், 15 செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விருது பெற்றவர்களைப் பாராட்டிய திரு. ஜே. பி. நட்டா, இந்தப் பாராட்டு பொதுச் சேவையில் தொடர்ந்து ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். “செவிலியர்கள் சுகாதாரத் துறையின் முதுகெலும்பு” என்றும் அவர் கூறினார்.

செவிலியர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பாராட்டத்தக்க சேவையை அங்கீகரிக்கும் அடையாளமாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973-ம் ஆண்டு தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது ஏற்படுத்தப்பட்டது.

பதிவுசெய்யப்பட்ட துணை செவிலியர்கள் & மருத்துவச்சி ஆகியோருக்கு மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில / யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான பணியில் உள்ள செவிலியர் தேசிய விருதுக்கு தகுதியுடையவர். ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் கொண்டதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்