2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது:”விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.”

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






