பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்(நிம்ஹான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

பெங்களூருவில் உள்ள  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற  பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் .நிகழ்ச்சியில் பேசிய அவர் , புதுமையான ஆராய்ச்சிகள், தனித்தன்மை வாய்ந்த நோயாளிகளை கவனிப்பதை உள்ளடக்கிய கடுமையான கல்வித் திட்டங்கள் ஆகியவை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக மாற்றியுள்ளன என்றார். சமூக அடிப்படையிலான மனநல சுகாதாரத்தில் பெல்லாரி மாதிரி  என்பது வரலாறு படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இப்போது, டெலி மனஸ் இயங்குதளம் தேவைப்படுவோரை சென்றடைவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 53 டெலி மனஸ் பிரிவுகள் ஏறத்தாழ 17 லட்சம் பேருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மொழியில் சேவை செய்துள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.கடந்த காலங்களில், மனநல பிரச்சனைகள் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்று கூறிய அவர், அண்மைக் காலங்களில், மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றார். மனநலப் பிரச்சனை குறித்த  அறிவியல்பூர்வமற்ற நம்பிக்கைகளும் களங்கப்படுத்தலும் முடிந்து போன கடந்த கால விஷயம் என்றும், அதிகரித்து வரும் விழிப்புணர்வானது மனம் திறந்து நோயாளிகள் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். எங்கும், எந்த நேரத்திலும் ஆலோசனை வழங்க டெலி மனஸ், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மனநலப் பிரச்னைகளைக் கையாள்வதற்கு சம்வாத் தளம் போன்ற பல முயற்சிகளை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மேற்கொண்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.உலகில் நாம் காணும் அனைத்திற்கும் ஆணிவேராக இருப்பது மனம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. மனம் மற்றும் உடலின் துயரங்களைப் போக்க யோகா போன்ற பாரம்பரிய முறைகளை நவீன மருத்துவ முறைகளுடன் வெற்றிகரமாக இணைத்ததற்காக தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.ஆரோக்கியமான மனமே ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். அறிவு மற்றும் ஞானத்துடன் இரக்கம் மற்றும் கருணை என்பது மருத்துவர்களுக்கும், மனநல சுகாதார நிபுணர்களுக்கும் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் மிக உயர்ந்த தரமான சிகிச்சை வழங்க வழிகாட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65