வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 25 கோடியே 51 இலட்சத்து 20
ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர்
வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2
கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் 6 மேம்படுத்தப்பட்ட பள்ளிகள், வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் துறை சார்பில் பெரம்பூரில் 8 கோடியே 76 இலட்சம் ரூபாய்
செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றை
திறந்து வைத்தார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
சார்பில் 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருமண
மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி
சார்பில் கார்த்திகேயன் சாலையில் 68 இலட்சம் ரூபாய் செலவில்
கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையக் கட்டடம், ஜி.கே.எம். காலனி 29வது
தெருவில் 27 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற
நலவாழ்வு மையக் கட்டடம், வ.உ.சி. தெருவில் 50 இலட்சம் ரூபாய் செலவில்
கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம், புளியந்தோப்பு,
போகிபாளையத்தில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
சென்னை உருது துவக்கப் பள்ளி கட்டடம், அயனாவரம், மதுரை தெருவில் 37
இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக்
கட்டடம், மதுரை சாமி மடம் சாலையில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய்
செலவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல், பேப்பர் மில்ஸ் சாலையில்
36 இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட உசைன் பூங்கா, பல்லவன் சாலையில்
33 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடம்,
பெரம்பூர் நெடுஞ்சாலை தெருவில் முரசொலி மாறன் பூங்காவில் 5 கோடியே 45
இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா;
நகர்ப்புற வீடட்றோருக்கு தேவராஜ் தெருவில் 72 இலட்சத்து 40 ஆயிரம்
ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம் மற்றும் சிவா ராவ்
சாலையில் 72 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக்
காப்பகம், குட்டி தம்புரான் தெருவில் 72 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்
செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம், புளியந்தோப்பு நரசிம்ம நகரில் 22கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப்
பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
திறந்து வைத்தார்.ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தல்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில்
வீனஸ் தியேட்டர் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்
7 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன்
17,399 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின்
தரை தளத்தில் நூலகம், இ-சேவை மையம், கழிப்பறைகள், முதல் தளத்தில்
மண்டல அலுவலகம், செயற் பொறியாளர்கள் மற்றும் துணை செயற்
பொறியாளர்கள் அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகம், கூட்ட
அரங்கம், பொறியாளர்கள் பிரிவு, இரண்டாம் தளத்தில் வருவாய் துறை,
சுகாதாரத் துறை, தேர்தல் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு
அலுவலகங்கள் செயல்படும்.
தந்தை பெரியார் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தல்
திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி, செல்லப்பா தெருவில்
2 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார்
மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் திறந்து வைத்தார்.
இப்புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தரை மற்றும் முதல் தளத்துடன் 6300
சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் புறநோயாளிகள்
வருகை பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சை அறை, மருத்துவ அலுவலர்
அறை, கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வக
மாதிரி சேமிப்பு அறை, மருந்தகம், தொற்றா நோய்கள் பரிசோதனை அறை,
முதல் தளத்தில் கர்பப்பை பரிசோதனை, காசநோய் பரிசோதனை, மருந்து
கிடங்கு, மருத்துவ ஆலோசனை அறை, ஆய்வக பொருள் கிடங்கு ஆகிய
வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 49,500 மக்களுக்கு சுகாதார
சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக வெங்கடம்மாள் சமாதி தெரு,
பொன்னியம்மன் கோயில் தெரு, கார்ப்பரேஷன் லேன், எஸ்.எஸ்.புரம் ஆகிய
பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர்.பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் 25 கோடியே 51இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத