குறள் விளக்கம்: வாயினால் அறியப்படும் சுவை, கண்ணால் அறியப்படும் ஒளி, உடலால் அறியப்படும் தொடு உணர்வு, செவியால் அறியப்படும் ஓசை, மூக்கால் அறியப்படும் நாற்றம்(மணம்), இந்த ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவராகிய கடவுளுக்குள் அடங்கியதே உலகம்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் சங்கீதம் 94:9 ‘காதை கண்ணை உண்டாக்கினவர் கேளாரோ? உண்டாக்கினவர் காணாரோ? என்றும், அப்போஸ்தலர் 17:28 “ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம். அசைகிறோம், இருக்கிறோம்:.. ” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.