ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று (05.05.2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். “ஐஐடி மெட்ராஸ்-ல் இருந்து பாரதத்திற்காக இணைந்து உருவாக்குவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த தொழில்நுட்ப உச்சிமாநாடு, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இதுபோன்ற முன்முயற்சிகளைப் பாராட்டியதுடன், இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பு ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டும் நிலையில் உள்ளது என்று கூறினார். ஆராய்ச்சிப் பணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில், மத்திய அரசின் வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ஐஐடி மெட்ராஸ் போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு, சிறப்பு மையங்கள் மூலம், ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்புள்ள அமைப்புகளாக இயங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், தற்போது அதற்கான முன்னுரிமைகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். ஆராய்ச்சி என்பது கல்விசார் ஆய்வுக் கட்டுரைகளுக்குள் மட்டும் முடங்கி விடாமல், அது அன்றாட வாழ்க்கையில் பயன்படக்கூடியப் பொருட்களாகவும், தீர்வுகளாகவும் உருவெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உள்நாட்டு முதலீடுகளின் அவசியத்தை எடுத்துரைத்த அவர், வெளிநாடுகளில், திறமையான இந்தியர்களால் உருவாக்கப்படும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள், இந்தியத் தொழில்துறைகளால் மீண்டும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி, அவற்றில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வலுவான உள்நாட்டுச் சந்தையுடன், உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருக்கும் சாதகமான சூழலை இந்தியா கொண்டுள்ளது என்று கூறினார். தனியார் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களை இலக்காகக் கொண்ட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக முன்மொழியப்பட்ட ரூ.1 லட்சம் கோடி நிதியில், மத்திய அரசின் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழில்நுட்ப உச்சிமாநாட்டில், என்டிபிசி இதய ஆராய்ச்சி மையம், பிபிசிஎல் ரோபோ உதவியுடனான அறுவை சிகிச்சைகளுக்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்ப மையம் மற்றும் எச்எஸ்பிசி திறன்சார் ஆதார மையம், எரிசக்தி மாற்றத்திற்கான மறுசுழற்சி மற்றும் சுழற்சிக்கான மையம் ஆகிய மூன்று முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுடன் கூடிய மையங்கள் தொடங்கப்பட்டன. மேலும், மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆதரவுடன் “போதன் ஏஐ” என்ற சிறப்பு மையத்தை ஐஐடி மெட்ராஸ் அறிவித்தது. 2027-ம் ஆண்டிற்குள், 10 லட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல் முறைகளில் பயிற்சி அளிக்கும் நோக்குடன், ஒரு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்த மையங்களை, மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவனத் தொடர்புத் துறைத் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், நிறுவன மேம்பாட்டு அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கவிராஜ் நாயர், நிறுவனத் தொடர்புத் துறைத் துணைத் தலைவர் திருமதி வசுதா நரசிம்மன், ஐஐடி மெட்ராஸின் பேராசிரியர்கள், தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் உடனிருந்தனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் டாக்டர் சஞ்சய் குமார், உயர்கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், மற்றும் என்டிபிசி, பிபிசிஎல், எச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களின் உயர்நிலை நிர்வாகக் குழுவினர் ஆகியோரும் இந்நிகழ்சியில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, கூட்டு முயற்சியை வலியுறுத்தினார். “தற்போது, சிறப்பாய்வு மையங்கள் வாயிலாக, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் ஆராய்ச்சித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, 2047-ம் ஆண்டிற்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை எட்டும் வகையில், அதற்கான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதே எங்கள் நோக்கமாகும்” என்று அவர் கூறினார். முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவனத் தொடர்புத் துறைத் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மஹாலிங்கம் பேசுகையில், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் போதுதான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படுகிறது” என்றார்.
இம்மாநாட்டில், “சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்: ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் 25 ஆண்டுகாலத் தாக்கம்” என்ற புத்தகமும் வெளியிடப்பட










