புதுடெல்லி:
இந்திய தபால் துறை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (ஙிறிவி) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தபால் வேலை- பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் 25,000ம் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை&2,095
விண்ணப்பிக்க கடைசி தேதி, ஒருமுறை பதிவு (One-Time Registration): ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை (மாலை 5 மணிக்குள்).
செப்டம்பர் 2-ம்தேதி முதல் (மாலை 5 மணி முதல்).
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 21-ம்தேதி வரை (மாலை 5 மணி வரை).
விண்ணப்பத் திருத்தம் (Correction Window):: செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 24 வரை (மாலை 5 மணி வரை).
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்தலாம். ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
21.09.2026 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. எழுத்து தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்திருப்பது கட்டாயமாகும்.

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
சென்னை:நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்






