வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்​வலம் புறப்படும். பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.
தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம், மேல்​கோயில், கீழ்​கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந் தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, 8-ந்தேதி விண்​மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்​பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.
ஆண்டு பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதேப்போல், சிறு, சிறு குழுக்களாக பிரிந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தபடி உள்ளனர். இவ்வாறு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் ஆங்காங்கே அன்னதானம், குடிநீர், தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.