சென்னை:
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்த அன்பழகன் என்ற மைனாக்குட்டி. விசிக நிர்வாகியான இவர் நேற்று அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளை எடுத்து அன்பழகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொலை தொடர்பாக வீனஸ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, அன்பழகனை வீனஸ் தரப்பினர் திட்டமிட்டு கொலை செய்தது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய்? ஜல்லிக்கட்டுக்கு இடம்கொடுத்தால் வீண் செலவா?: சீமான் காட்டம்
சென்னை:த.வெ.க எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக் கடைக்கு சென்று






