காத்மாண்டு:
நேபாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் துணைத் தொடரான லாங்டாங் ஹிமாலின் மிக உயரமான பனிச்சிகரம் லாங்டாங் லிருங். அங்குள்ள பனிப்பாறைகள் உருகி பனிச் சிகரத்துக்குள் மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.
கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதனால் ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். 558 பேரைக் காணவில்லை. இதில் பெரும் பாலானோர் இந்தியர்கள் ஆவர்.
நேபாளத்தில் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரசுவா, தாதிங், நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்பால் நேபாளத்தில் இதுவரை 626 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 644 வெளிநாட்டினர் உட்பட 2,381 பேரைக் காணவில்லை.
இந்நிலையில், சீனா – நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பனிப்பாறைகள் உருகி மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது. இந்த ஏரி நேற்று உடைந்து திபெத், நேபாள நதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது ஏரி உடைந்து நேபாள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நதிகளின் கரையோரம் வசித் தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் இந்த முறை உயிரிழப்பு தடுக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தின் திரிசூலி நதியில் புதிதாக நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 26-ம் தேதி பெருவெள்ளத்தின் போது நீர் மின் நிலைய கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்துக்குப் பிறகு 250 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எனினும், சுரங்கத்தில் சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அங்கு மீட்புப்பணி மேற் கொள்ள இந்தியாவின் உதவியை நேபாள அரசு நாடி உள்ளது.

சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய்? ஜல்லிக்கட்டுக்கு இடம்கொடுத்தால் வீண் செலவா?: சீமான் காட்டம்
சென்னை:த.வெ.க எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக் கடைக்கு சென்று






