ஒட்சா உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை:
தமிழ்நாடு ஒட்சா உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் கே.இலட்சுமணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜி.கிரிஷா, மாநில பொருளாளர்ஆர்.சத்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சசி ஏற்பாடுகளை ஆர்.சென்னம்மாள், கே.எஸ்.லதா, எஸ்.சபிதா, செல்வேந்திரன், மாரியப்பன், இலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஓட்சா கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.அமல்ராஜ் பங்கற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அதில், ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு உறுதியளித்தபடி மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை விடுவிக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்களால் தன்னிச்சையாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊக்குநர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அது தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஊக்குநர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்க வேண்டும்.
ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ரூ. 10,000- ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
சுகாதார ஊக்குநர்களுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தனிநபர் இல்ல கழிப்பறை ஊக்கத்தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.
அரசின் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குநர்கள் (1) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஊராட்சிகளில் தொகுப் பூதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ளிபிஜி ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளி தூய்மை பணியாளர்கள் (ம) பள்ளி கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கு ரூ. 6,000-ம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் மாதம் ரூ. 250- மட்டுமே ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி ளிபிஜி ஆப்ரேட்டர்களுக்கு அரசாணை எண். 17ன்படி மாத ஊதியத்தை ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
சட்ட மன்றத்தில் அரசு அறிவித்தபடி அனைத்து ஊராட்சி பணியாளர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.30,00,000 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் செயல்பாட்டில் உள்ள டிராக்டர் மற்றும் இ. கார்ட் வண்டிகளுக்கு ஓட்டுநர் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அதற்கு முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் அறிவித்தபடி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊராட்சி தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் கோரிக்கை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என உறுதிப்பட தெரிவித்தார்.

ரூ.4,800 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை,தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்

பாதியில் விடப்பட்ட சைதாப்பேட்டை அம்மா பூங்கா; முதியவர்கள், குழந்தைகள், வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் திறப்பது எப்போது?

சென்னை:சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை-&கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை