போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:
தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்கள் மிகவும் சிரமமான சூழலில் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். அவசர காலங்களில் ஏதேனும் கால்நடை உயிரிழந்திருந்தாலும், அதனை அகற்றும் பணியை செய்துவிட்டு அடுத்த வேளை உணவுக்காக செல்ல வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், உறுப்பினர் ஒருவர் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசும்போது, 2025ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்ததாக குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார். ஆனால், முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பே, கட்சியின் தலைவராக இருந்த காலத்திலேயே தூய்மைப் பணியாளர்களை அழைத்து அவர்களுடன் பேசியிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களை முதல்வர் இரண்டு முறை நேரில் அழைத்து பேசியதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். போராட்டம் நடத்துவதற்கே உரிய இடம் கிடைக்காமல் தூய்மைப் பணியாளர்கள் தவித்து வந்த நிலையில், ரிப்பன் பில்டிங்தான் அவர்களுக்கு போராடுவதற்கான இடமாக அமைந்ததாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
போராட்டத்தின் போது சில கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் வலியையும் நோக்கத்தையும் அரசு புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை செயல்படுத்தவே முயன்று வருவதாக தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் நமது எதிரிகள் அல்ல என்று குறிப்பிட்டார். மேலும், அங்கு போராடி வரும் உழைக்கும் மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் என்றும், அவர்களின் கோரிக்கைகளையும் அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களான மாலா, பார்த்திபன், ஞானகுமார், அருண்ராஜ் ஆகியோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களுக்கான உரிய ஆவணங்கள் தாட்கோ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.மேலும், முதல்வர் தலைமையில் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.இதுவரை 93 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் 17 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் கூறினார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் உடை மாற்றிக் கொள்ளும் வகையிலான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 4, 7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார். குறிப்பாக, முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் காலை உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
அதேபோல், தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் குணசேகன் இல்லத்திருமண விழா: நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து

சென்னைசென்னை நந்தனம் கலைக்கல்லூர் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஆர்.குணசேகரன்&பானுமதி தம்பதியரின் மகன் கு.தீபக்கிற்கும்

டான்னோ, டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம்: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர்களுக்கு டாம்கோ,

நேபாளா வெள்ளத்தில் மாயாமான நீதிபதி சிவஞானத்தை கண்டுபிடிக்க தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் மனு

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர் நீதிமன்றத்தின்