ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். 

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று  அதிகாலை  5 மணி அளவில்  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதனையொட்டி, ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில், முத்தங்கி கவச அலங்காரத்தில் பல்லக்கில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.