10,000 கேரக்டர்களில் டிவீட் செய்ய ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ:
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது டிவிட்டர். இதனை கடந்த ஆண்டு எலான் மஸ்க் வாங்கி இருந்தார். அது முதலே புதுப்புது அப்டேட்களை அவர் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் கடைபிடித்து வருகிறார்.
சமூக வலைதளமான டிவிட்டரில் 280 கேரக்டர்களில் மட்டுமே நமது கருத்துக்களை ட்வீட் செய்ய முடியும். ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது ‘ட்விட்டர் ப்ளூ’ பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
ட்விட்டர் ப்ளூ சேவையை பெற பயனர்கள் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது. வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என இதன் மாதாந்திர சந்தா உள்ளது. இதை பயனர்கள் செலுத்துவதன் மூலம் விளம்பர இம்சைகள் இல்லாமல் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியுமாம். மேலும், ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400