சென்னை மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 3,108 உட்புற சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.291.29 கோடி மதிப்பீட்டில் 3,108 உட்புறச் சாலைகள், ரூ.76.56 கோடி மதிப்பீட்டில் 87 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர், வழிகாட்டுதலின்படியும், மேயரின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியில், பல்வேறு திட்டங்களின் கீழ் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் மற்றும் 5,270 கி.மீ. நீளமுடைய 34,640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 மற்றும் மாநகராட்சி மூலதன நிதி மற்றும் வெளி ஆதாரத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் தலைமையில், உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட குழுவினரால் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022-23ஆம் ஆண்டில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டம்-1 ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் ரூ.291.29 கோடி மதிப்பீட்டில் 3,108 உட்புறச் சாலைகள், ரூ.76.56 கோடி மதிப்பீட்டில் 87 பேருந்து தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவற்றில், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 28 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.8.39 கோடி மதிப்பீட்டில் 15 சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் 7 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், ரூ.89.07 கோடி மதிப்பீட்டில் 997 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் 296 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.35.79 கோடி மதிப்பீட்டில் 414 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.26.43 கோடி மதிப்பீட்டில் 287 உட்புறச் சாலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகளில் ரூ.41.11 கோடி மதிப்பீட்டில் 414 உட்புறச் சாலைகள், ரூ.31.33 கோடி மதிப்பீட்டில் 30 பேருந்து தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதுதவிர, ரூ.161.11 கோடி மதிப்பீட்டில் 1697 உட்புறச் சாலைகள், ரூ.27.23 கோடி மதிப்பீட்டில் 29 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65