1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். – குறள் : 56
கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, தன்னை மணந்து கொண்ட கணவனையும் கற்புத் தவறாதவாறு பேணிக் காத்து மனையறங்களில் தளர்ச்சியில்லாத புகழை உடைய சிறந்த பெண்ணே இல்லறத்திற்குச் சிறந்தவளாவாள்.







