அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள்: மணிப்பூர் மக்களுக்கு சோனியா வேண்டுகோள்….

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான ‘மெய்தி’ இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது. பா.ஜனதா தலைவர்களின் வீடு மற்றும் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு வீடியோ உரையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது :-

அனைத்து இனங்கள், மதங்கள் கொண்ட மக்களை அரவணைத்துக் கொள்ளும் திறனுக்கு மணிப்பூர் வரலாறு சாட்சியாக அமைந்துள்ளது. சகோதரத்துவ உணர்வை வளர்க்க அளப்பரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால், வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டிவிட ஒரே ஒரு தவறான செயல் போதும். மணிப்பூரில், ஒருவருக்கொருவர் அமைதியாக இணைந்து வாழ்ந்த சகோதர, சகோதரிகள், ஒருவரை ஒருவர் எதிராக நிற்பதை பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. தாங்கள் வாழ்ந்த வீட்டையும், பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த பொருட்களையும் அவர்கள் விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்எப்போதும் கண்டிராத வன்முறை, மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, மணிப்பூர் மக்களை, குறிப்பாக துணிச்சலான சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த அழகிய மண்ணில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள். ஒரு தாயாக, அவர்களது வேதனை எனக்கு புரிகிறது. இருப்பினும், அமைதி பாதையை தேர்ந்தெடுத்தால்தான், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் சிறப்பாக அமையும். இனிவரும் வாரங்களிலும், மாதங்களிலும் நம்பிக்கையை கட்டமைப்பதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்வோம். மணிப்பூர் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இந்த சோதனையான காலகட்டத்தை நாம் ஒன்றுசேர்ந்து கடப்போம். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65