இந்தூர்:
மத்திய பிரதேசம் மாநிலம் ஜமால்பூரை சேர்ந்தவர் கஜேந்திரசிங். வருவாய்துறை அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் லஞ்சம் கேட்பதாக லோக் ஆயுதா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுக்க சொல்லி உள்ளனர். அப்போது லஞ்சப் பணத்தை வாங்கிய கஜேந்திரசிங்கை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
செய்வது அறியாது திகைத்த கஜேந்திர சிங், தனது கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதைப்பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கஜேந்திர சிங்கை காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு, பின்னர் அவர் விழுங்கிய பணத்தை எடுத்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரி ஒருவர் லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






