சென்னை :
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதியும் தாக்கல் செய்துள்ள மனுக்களில், ‘தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் இன்று விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று அந்த அமர்வு கூறியுள்ளது.
இதற்கிடையே, எடப்பாடி சார்பில் வழக்கறிஞர்கள் கவுதம்குமார், பாலமுருகன் ஆகியோர் ஐகோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளனர். இது, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் 39வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு