குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழா

இந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவரின் அலுவலகம் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 250 புகழ் பெற்ற விருந்தினர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அழைப்பிதழ் இந்திய அஞ்சல் துறையின்  சார்பில் விரைவு தபால் மூலம் பட்டுவாடா செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அஞ்சல் மண்டலம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த திரு. பொன்னையா, புதுக்கோட்டை மாவட்டம் கேசராப்பட்டியை சேர்ந்த திருமதி அமுதா அவர்களுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இன்று மேற்பார்வை அதிகாரியுடன் அஞ்சல் துறை ஊழியர் மூலம் இருவருக்கும் அந்த அழைப்பிதழ் பட்டுவாடா செய்யப்பட்டது. திரு பொன்னையா அவர்கள் சிறந்த விவசாயியாகவும், நீர்வள சங்கத்தின் விருது பெற்றவராக உள்ளார். திருமதி. அமுதா அவர்கள் நமோ ட்ரோன் சகோதரி பயனாளி ஆவார்.

குடியரசுத்தலைவரிடம் இருந்து குடியரசு தின விழா 2025-ல் பங்கேற்க அழைப்பைப் பெற்றதற்கும், நேற்று குடியரசுத்தலைவர்  அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழ் இன்று விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அஞ்சல் துறையின் உடனடி சேவைக்கு அழைப்பாளர்கள் இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube