‘தனது மகனின் உயிரைக் காத்த பிரதமர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்’ – ஆவடியைச் சேர்ந்த தாய் சுகந்தி நெகிழ்ச்சிசென்னை, ஏப்ரல் 20, 2026எனது மூன்று வயது மகன் மோனிஷ்வரின் உயிரைக் காக்க உரிய நேரத்தில் நிதி உதவி வழங்கி, மறுவாழ்வு அளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆவடியைச் சேர்ந்த சிறுவனின் தாயார் சுகந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி – பெருமாள் தம்பதியினரின் மகன் மோனிஷ்வர் (3). இவர் ‘பீட்டா தலசீமியா மேஜர்’ (Beta Thalassemia Major) எனும் கடுமையான இரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்குத் தீர்வாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant) செய்ய வேண்டும் என்றும், அதற்கு சுமார் ₹9.46 லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் (HVF) பணிபுரியும் தந்தை பெருமாள் மற்றும் தாய் சுகந்தி ஆகியோரால் இந்த பெரும் தொகையைத் திரட்ட இயலாத சூழல் இருந்தது.பிரதமரின் உடனடித் தலையீடு:குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நிலையை விளக்கி, நிதியுதவி கோரி கடந்த மார்ச் 27, 2025 அன்று சுகந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தாயின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் அலுவலகம் (PMO), சிறுவனின் சிகிச்சைக்காக ₹8,51,400 நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்தது.தாய் சுகந்தி விடுத்துள்ள நெகிழ்ச்சியான அறிக்கை: ‘எனது மகனின் நிலைமையைக் கண்டு நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தோம். ஐந்து வயதிற்குள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தால்தான் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சாதாரணத் தாயின் குரலுக்கு மதிப்பளித்து, எனது மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய பிரதமர் அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.கடந்த ஜூலை 21, 2025 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று எனது மகன் மோனிஷ்வர் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்த பிரதமரின் இந்த உதவி, எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு அரசு மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது’ என்றார்.இந்த நிகழ்வு, இக்கட்டான மருத்துவச் சூழல்களில் மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும், அக்கறையுடனும் செயல்படுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. உரிய நேரத்தில் கிடைத்த இந்த நிதியுதவி, ஒரு சிறுவனின் எதிர்காலத்தை மீட்டெடுத்துள்ளது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 36: “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.” விளக்கம்:



