தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில், 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தையொட்டி, மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தங்களின் பாரம்பரிய முறைப்படி கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்த ஆண்டும் கண்மாயில் தண்ணீர் குறைந்ததைத் தொடர்ந்து, ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கச்சரி, ஊத்தா, வலை போன்ற பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாய்க்குள் இறங்கி, கட்லா, ரோகு, கெண்டை உள்ளிட்ட பல்வேறு நாட்டு வகை மீன்களைப் போட்டிப் போட்டுக் பிடித்து மகிழ்ந்தனர். இவ்வாறு பிடிபட்ட மீன்களை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று சமைத்து, இறைவனுக்குப் படைத்து வழிபடப் பயன்படுத்துவது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்
அரசு அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்






