தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் கன்ஷியாம் தோரி, இ.ஆ.ப., (Mr. Ghanshyam Thori, I.A.S.,) அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி எஸ். லட்சுமி பிரியா அவர்கள் முன்னிலையில், காவல்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (23.03.2026) அடையாறு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி எஸ். லட்சுமி பிரியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என். காளிதாஸ், காவல் துணை ஆணையாளர்கள் .ஏ.சி.கார்த்திகேயன், வி.ஆர்.சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகை
இன்று (24.03.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி





