குறள் 36: “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.”
விளக்கம்: “பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று தள்ளிப்போடாமல், அறச்செயல்களை உடனே செய்ய வேண்டும். உடல் அழியும் காலத்திலும் நாம் செய்த அறம் மட்டுமே நமக்கு அழியாத துணையாக நிற்கும்.திருமுறை (யாக்கோபு 2:8): “உன்னிடத்தில் நீ அன்புகூறுகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளையை நிறைவேற்றுவது நன்மையாகும் என்று கூறுகிறது.
திருமுறை (யாக்கோபு 4:17): ஒருவன் நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அது அவருக்குப் பாவமாகும் என்று எச்சரிக்கிறது.ஒப்பீடு: நற்செயல்களைத் தள்ளிப்போடாமல் உடனே செய்ய வேண்டும் என்ற உன்னதமான கருத்தைத் திருக்குறளும் விவிலியமும் ஒரே நேர்க்கோட்டில் வலியுறுத்துவதை இப்பகுதி விளக்குகிறது.




