திருவண்ணாமலை தீபம்போல இந்தியாவுக்கு தெரியும் புதிய நம்பிக்கை ஒளி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தீபம்போல, இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திருவண்ணாமலையையும், தீபத்தையும் பிரிக்க முடியாது.அதேபோல, திருவண்ணாமலை யையும், திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. 2021-ல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை. `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை, இங்கிருந்துதான் தொடங்கினேன்.
வாக்குச்சாவடி பொறுப்பாளர் கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரம் கட்சிக்காக ஒதுக்கி, தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.
திமுகவை எதிர்த்தவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பாராட்டி வருவதால், எதிரிகள் அச்சமடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை தொடங்கவில்லை என்று வயிற்று எரிச்சலில் பேசுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தொடங்கிவைப்பதாக பொய் கூறுகிறார்.
மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்து பயணம், காலை சிற்றுண்டி, புதுமைப் பெண், நான் முதல்வன், நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு போன்றவைஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களா? தரையில் ஊர்ந்துசென்ற பழனிசாமியே, கொஞ்சம் தலையை தூக்கிப் பாருங்கள். வேளாண்மை சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவுக்கு பல்லக்கு தூக்கியவர்தான் பழனிசாமி.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தோற்றவர் பழனிசாமி. வரும் மக்களவைத் தேர்தலிலும் அவர் முழுமையாக தோற்கடிக்கப்படுவார். தேர்தல் களம் என்பது போர்க்களம் போன்றது. அது நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பல போர்களை சந்தித்தது திருவண்ணாமலை மாவட்டம். இந்திய ஜனநாயகத்தை காக்கக் கூடிய போர்க் களத்தில் தற்போது நாம் இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் காணப்போகும் வெற்றிதான், எதிர்கால இந்தியாவுக்கு மிக முக்கியமானது. மக்களைப் பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தும் பாஜகஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்துக்கு, திருவண்ணாமலை பயிற்சி பாசறைக் கூட்டம் வழிகாட்டியாக அமையட்டும். திருவண்ணாமலை தீபம் தெரிவதுபோல, இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65