சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஆண் பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 4.862 கிலோ போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது பணத்திற்காக தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தி வந்ததாக ஒப்புக் கொண்டார்.







