சென்னை:
சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பல்வேறு முக்கியப் பிரிவுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கட்டட விரிவாக்கத்திற்குப் பிறகு இங்குள்ள வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு பொது மருத்துவ பிரிவில் காய்ச்சல், தொற்றுநோய்கள் மற்றும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொது அறுவை சிகிச்சை பிரிவில் அவசர மற்றும் திட்டமிடப்பட்ட பொது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. மகப்பேறு பிரிவில் பிரசவ வார்டுகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கண்காணிப்பு வார்டுகள்.
குழந்தை நலப் பிரிவில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு மற்றும் சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு மற்றும் மூட்டு சிகிச்சை பிரிவில் எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் பிரச்சினைகளுக்கான சிகிச்சைப் பிரிவு. கண், காது, மூக்கு, தொண்டை பிரிவில் ணிழிஜி பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை வார்டு, தோல் நோய் பிரிவு. தோல் சம்பந்தமான அலர்ஜி மற்றும் நோய்களுக்கான பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு பிரிவாக போதை மறுவாழ்வு சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் இங்கு சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக ஏராளமானோர் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை என்பது நோய்களுக்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வுக்கான மையமாக கருதப்படுகிறது. விஷயம் இருப்படி இருக்க, சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடப்பதை கண்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே மூளை முடுக்கெல்லாம் சுழன்று கொண்டிருக்கின்றன. இதையும் பொருட்படுத்தாத சிலர் மது அருந்துகின்றனர். இதுவே தவறாக கருதும் பட்சத்தில், மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டும் செல்கின்றனர். இது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இதனை துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிடுகறார்களா? அல்லது மருத்துவமனை பொறுப்பு நிர்வாகிகளிடம் புகார் கூறுகிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் மருத்துவமனையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது வேதனையான ஒன்று.
இதுபோன்ற சமூக விரோத செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணித்து இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?
சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.






