மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்கை அஞ்சல் துறை நடத்தியது..

அஞ்சலக ஏற்றுமதி மையம் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. தற்போது, 49 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும் 5 மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்க உள்ளன. இது தமிழ்நாட்டில் வணிகங்களுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். அஞ்சல் துறை சார்பாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. ஏற்றுமதி செயல் முறைகளை விளக்குவதற்காகவும் அஞ்சலக ஏற்றுமதி மைய சேவைகளின் வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் குறிப்பாக பட்டு கைத்தறி ஆகியோரை இந்தப் பயிலரங்கம் ஒன்றிணைத்தது.

இந்தப் பயிலரங்கத்திற்கு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் G.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல்துறைத் தலைவர் B.P. Sridevi (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) தமிழ்நாடு வட்டம், சென்னை மண்டல கூடுதல் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் ராஜலட்சுமி தேவராஜ், N. ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் இராமநாதன், பட்டுப் பூங்கா, காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை நகர மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரபவற்புரையாற்றி விழாவினை துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 150 ஏற்றுமதியாளர்கள் இந்தப் பயிலரங்கத்தின் மூலம் பயனடைந்தனர்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், சுங்க நடைமுறைகள், பேக்கிங்கிற்கான (packing) விரிவான உதவி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளை வழங்குகிறது. இந்த மையங்கள் வணிகர்களுக்கு சர்வதேச வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இந்த மையங்கள், ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் மற்றும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. அஞ்சலக ஏற்றுமதி மையம் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களை ஊக்குவிக்கின்றோம்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு https://www.indiapost.gov.in/ and https://dnk.cept.gov.in/customers.web/.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.