அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர் பகுதிகளில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்..

அனகாபுத்தூர் டோபிகண்ணா தெரு சாந்தி நகர் தாய் மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருந்து வந்த நிலையில் மக்களின் வீடுகள் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என்று சொல்லி பல்லாவரம் வருவாய் துறையினரால் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வீடுகள் இடிக்கப்பட்டன.

இதனை பார்வையிட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று தீபாவளியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் M.P அவர்களும் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களும் இடித்து தள்ளப்பட்ட வீடுகளின் இடத்தை பார்வையிட்டார்கள். அப்போது வீடுகளை இழந்த மக்கள் தொல்.திருமாவளவனிடம் நாங்கள் இங்கு சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தோம் ஆனால் தற்போது நாங்கள் தீபாவளி நாளில் நடுத்தெருவில் நிற்க்கின்றோம். தாங்கள் தான் இதற்க்கான தீர்வினை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது தொல்.திருமாவளவன் பொதுமக்களுக்கு ஆருதல் கூறினார்.
உடன் மாவட்ட‌ செயலாளர் தேவ அருள்பிரகாசம் அனகாபுத்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்லாவரம் வடக்கு பகுதி மாவட்ட செயலாளர் ஏழுமலை என்கின்ற திருநீர்மலை தமிழரசன் P.S மாதுவிக்ரமன் மற்றும் அனகாபுத்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்