அனைத்து மாவட்டங்களிலும் களைகட்டிய தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் !

தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு, சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் இன்று ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாகாணம்: நாடு விடுதலை அடைவதற்கு முன்னரும் விடுதலை அடைந்த பின்னரும் சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்பதுதான் நமது மாநிலத்துக்கு பெயர். மொழிவாரி மாநிலங்களாக நாட்டின் பல மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டுக்கு பழைய பெயர்கள்தான் தொடர்ந்தன. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மாநில உருவாக்க நாளாக கொண்டாடுகின்றன. ஆனால் நவம்பர் 1-ந் தேதி தமிழர்கள் கொண்டாட முடியாத அளவுக்கு சென்னை மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த பல பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைந்தன. இருந்த போதும் பிற மாநிலங்களைப் போல நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

தமிழ்நாடு பெயர் சூட்ட கோரி போராட்டங்கள்: 1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட கோரி தியாகி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மரணத்தை தழுவினார். பின்னர் 1960, 1961-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன 1962-ல் ராஜ்யசபாவில் பூபேஷ் குப்தா எம்.பி, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என மாற்றம் செய்ய மசோதா தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. 1964-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ராம.அரங்கண்ணல் தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் கொண்டுவந்தார். இதுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. பேரறிஞர் அண்ணா குறுகிய காலமே ஆட்சி செய்தவர். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா ஜூலை 18-ந் தேதி சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என மாறியது. ஜூலை 18 தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு நாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.