தேனி:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவள்ளி (38). கடந்த 9ம் தேதி மகன், மகள் கல்லூரிக்கு சென்றபிறகு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால், 2 தினங்களுக்கு முன் மகள் பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அம்சவள்ளியை தேடி வந்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கடைசியாக தேனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.
இந்நிலையில், தேனி அருகே, பழனிசெட்டிப்பட்டி சவுடேஸ்வரி நகரில் குடியிருக்கும் புரோட்டா மாஸ்டரான அப்துல் ரகுமான் (36) என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசாரும், செல்போன் ஆய்வு தொடர்பாக பெரியகுளம் போலீசாரும் அப்துல் ரகுமான் வீட்டிற்கு சென்றனர்.
வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அப்துல் ரகுமான் இருந்தார். அவர் அருகே சாக்கு மூட்டையில் அம்சவள்ளி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். போலீசார், அம்சவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். எஸ்பி பிரவின் கவுதம் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், அப்துல் ரகுமானுக்கு செல்போன் மூலம் அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த 9ம் தேதி அம்சவள்ளி, அப்துல் ரகுமான் வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் அருகில் இருந்த கல்லால் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அம்சவள்ளி துடிதுடித்து உயிரிழந்தார். யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு போய் வீசி விடலாம் என நினைத்து, சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளார். தெருவில் ஆள் நடமாட்டம் இருந்ததாலும், எங்கே கொண்டு செல்வது என தெரியாமலும் வீட்டிலேயே பிணத்துடன் இருந்தது தெரியவந்தது என்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






