சென்னை:
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 மோட்டார்கள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் நிலையில் உள்ளது
சென்னையில் பருவ மழையின் முன்னெச்சரிக்கையாக எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கு நீரை கண்டறிந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதே போல் தேங்கி நிற்க்கும் மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 க்கும் மேற்பட்ட மோட்டார்கள் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை த்துறை அலுவலகம் அருகே தயார் நிலையில் நிற்த்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்
இது குறித்து நெருஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். பருவ மழை முன்னெச்செரிக்கையாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 மோட்டார்கள் தனியார் நிலையில் உள்ளது.
மேலும் ராட்சத மோட்டார்கள் கூட தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால் பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளித்த அந்த நொடிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீர்களை அகற்றுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






