அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய விசாரணை…

சென்னை தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவில் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றையும் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்தது.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. அமைச்சர் பொன்முடி வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:- அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது. அவருக்கு வயது 72. அவருக்கு சில உடல்நலக்குறைவும் இருக்கிறது. அவருக்கு மன உளைச்சலை, உடல் உளைச்சலை இது ஏற்படுத்தியிருக்கும். இப்படி செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு சொல்லியிருக்கிறது. இந்த ஸ்டேட்மெண்டை மறுநாள் காலை வாங்கினால் என்ன ஆகிவிட போகிறது? ஆதாரங்கள் ஏதாவது அழிந்துவிடவா போகிறதா? இது அமலாக்கத்துறை அலுவலகமா, சித்ரவதை கூடமா? தி.மு.க. அமைச்சர்கள் மீது 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகள் தான் இவர்கள் கண்ணுக்கு தெரிகிறதா? கடந்த 10 ஆண்டு அதிமுக அமைச்சர்கள் செய்த தவறுகள் தெரியவில்லையா? ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்த்து வந்தவர் அமைச்சர் பொன்முடி. ஆளுநர் ஒருவாரம் டெல்லி சென்றார். இப்போது அமலாக்கத்துறை வந்து நிற்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த வழக்குக்கு, 2023-ம் ஆண்டில் விசாரணை நடத்தினால் எந்த ஆதாரம் கிடைக்கும்? இது யாரை ஏமாற்றும் வேலை? இருந்தாலும் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் பொன்முடி தெளிவான பதில்களை கூறியுள்ளார். அவர் இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் ஆஜர் ஆகிறார் என கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.