அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்டரீதியான அளவீட்டு விதிகளைத் திருத்தி, தனியார் நிறுவனங்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக அங்கீகரிக்க ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவிடும் கருவிகளைச் சரிபார்க்கும் பணியில் தனியார் துறையும் பங்கேற்க முடியும்.

இந்த முயற்சி, இந்தியாவின் சரிபார்ப்புத் திறனை அதிகரித்து, காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான பொது–தனியார் கூட்டு ஒத்துழைப்பு மாதிரியைப் பிரதிபலிக்கிறது.

தகுதியான சோதனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் கொண்ட தனியார் ஆய்வகங்கள் நவம்பர் 30, 2025 வரை https://doca.gov.in/gatc என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கருவி வகைக்கு ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்கள், புதிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட சீரான சரிபார்ப்புக் கட்டணங்களைப் பெறலாம்.

இந்த நடவடிக்கை, நாட்டின் சுகாதார, போக்குவரத்து, எரிசக்தித் துறைகளில் துல்லியமான அளவீடுகளை உறுதிசெய்து, தற்சார்பு இந்தியா நோக்கத்தை வலுப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்