ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா-நேபாளம் அணிகள் மோதல்

பல்லகெலெ:
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நேற்று முன்தினம் இதே மைதானத்தில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தியா-நேபாளம் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனிடையே பல்லகெலெவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்