சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை, பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். இதேபோல் ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை
உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளாவன், “கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது. இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம். அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.ப.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி.. கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முனவர வேண்டுமென மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.







