அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

சென்னை:
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது; தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இரு காரணங்களின் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டதாகும். முதலாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஒதிஷா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து 03.08.2021-ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
மற்றொருபுறம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த சர்ச்சை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக ‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு’’ என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.
2021ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 18 பேர் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டனர். அந்த 18 பேரின் தற்கொலைக்கும், அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததற்கும் தமிழக ஆளுநர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவை அனைத்தையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு வகையில் நல்லது தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ சட்டப்பேரவை மீண்டும் இயற்றி அனுப்பும் போது அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதனால் தான் இதை நல்லது என்கிறேன்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கடசிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்