ஆரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் !

களம்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். களம்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போளூர் வட்டார குழு, களம்பூர் நகர கிளையின் சார்பில் காந்தி சிலை அருகே நடந்த உண்ணாவிரதத்துக்கு வட்ட குழு நிர்வாகி மே.சமாதானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரா.தங்கராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆரணி ஹவுசிங் போர்டு முதல் போளூர் நெடுஞ்சாலை எட்டிவாடி வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத்தில் குடிநீர் குழாய்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அரசே மாற்றி அமைக்க வேண்டும், பஸ் நிறுத்தம் அருகே அண்ணா சிலை, காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, எம்ஜிஆர் சிலை, அம்பேத்கர் சிலை, வீரா ஆஞ்சநேயர் கோவில் அகற்றாமல் சாலை அமைக்கப்பட வேண்டும், வேலூர் கண்டடோன்ட்மென்ட் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் மின்சார ரெயிலை திருவண்ணாமலையிலிருந்து புறப்பட செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்ட நிர்வாகி முத்தையன் முடித்து வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா, இலக்கிய அணி மாநில செயலாளர் அன்பு, வட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஆரணி வட்ட செயலாளர் குப்புரங்கன், சித்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிர போராட்டத்தின் முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட