இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசம் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கருத்து

இந்தூர்:
இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்தூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3-வது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் மொத்தம் 3 நாட்களில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் சுழற்பந்துக்கு சாதகமாகவே இந்த மைதானம் இருந்தது. பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இந்தூர் கிரிக்கெட் மைதானம் மிகவும் மோசமான ஆடுகளம் என்று ஐஐசி மதிப்பீடு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது , இந்தத் தொடரில் ஆடுகளங்கள் மோசமாக இருந்தன என்று நான் நினைக்கிறேன், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் , மேலும் இந்த 3 டெஸ்ட் போட்டியில் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்