ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.
பல்வேறு குட்டித் தீவுகளைக் கொண்ட தீவு தேசமான இந்தோனேசியாவில் இயற்கைச் சீற்றங்கள் அதிகம் ஏற்படுவது வழக்கம், அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ஃப்ளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது.
அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






