உணவு பாதுகாப்பு எல்லையை மீறும் சைதாப்பேட்டை பிரபல பிரியாணி ஓட்டல்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் மிகப்பெரியதும் மற்றும் பிரபலமானதுமான எஸ்.எஸ்.பிரியாணி ஓட்டல் இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே சைவ ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்டவை இயங்கி வருகின்றனர்… இந்த பிரியாணி ஓட்டலின் எதிரே சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, சாலையோர கடைகள், அரசு புறநகர் பொது மருத்துவமனை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன…
பிரியாணி ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்கின்றன… அதிக அளவில் கழிவுகளை பாதாள சாக்கடை வழியாக அனுப்புவதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது.. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக கலைஞர் வளைவு அருகே கழிவு நீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், நோயாளிகள், மார்க்கெட் மற்றும் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நோய் பாதிப்பு ஏற்படும் அவலம் உள்ளது..
மேலும் இந்த பிரியாணி கடையின் கழிவுகளை சம்மந்தமே இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் அதிகாலையில் இரண்டு வாகனங்களில் வந்து அப்புறப்படுத்துகிறார்கள். கழிவுகளை அள்ள ஒப்பந்த அடிப்படையில் வாருவதற்கு செலுத்த வேண்டிய ஆயிரக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் இதுபோன்ற சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளர்களை கொண்டு வேலை வாங்கிக் கொள்கின்றனர். இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் தங்களுக்கு பிரியாணி கொடுப்பதாகவும், உதவி செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்… இதேபோல் தனியார் விடுதிகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றிலும் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
இதுபோன்ற இந்த பிரியாணி ஓட்டலின் அத்துமீறல்கள் குறித்து பிரியாணி நிர்வாகத்திடம் கேட்கும்போது, உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்.. நாங்கள் கவுன்சிலர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், மெட்ரோ வாட்டர், சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும், பிரியாணிகளை இலவசாக வழங்குவதாகவும் தைரியமாக தெரிவிக்கின்றனர்… மேலும் தட்டிக்கேட்கும் ஒருசிலரை தாக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது…
காவல் துறையிடம் முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை. இதுவே சிறிய ஓட்டல்களாக இருந்தால் உணவு பாதுகாப்பு துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சீல்வைத்து செல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.. ஆனால் பெரிய நிறுவனங்கள் என்றால் தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்…. மேலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று நிலையமும் நியாயமாக செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றனர்… உடனடி நடவடிக்கை பாயுமா?

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச