சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 7வது அவென்யூவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன காவலாளியான ராணா சிங் என்பவர் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அதிலிருந்த குண்டு அவரது வயிற்றில் பாய்ந்தது. இதில் ராணா சிங் பலத்த காயமடைந்தார். துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு அந்த இடத்திற்கு வந்த சக ஊழியர்கள் காயமடைந்த ராணாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ஹாரிங்டன் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றார்கள.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






