ஒடிசா ரயில் விபத்தைக் காரணத்தால் விமான கட்டணத்தை உயர்த்தக் கூடாது : மத்திய அரசு அறிவிப்பு

நேற்று முன் தினம் மாலை 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதி கடும் விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.  தவிர சுமார் 800 பேர் காயம் அடைந்துள்ளனர்.  மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  பிரதமர் மோடி உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளனர். விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி பேட்டியில்,

“இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும். ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,

”ஒடிசாவில் நிகழ்ந்துள்ள துரதிருஷ்டவசமான விபத்தைக் காரணம் காட்டி புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்